Email reminders…!

Reme.IO is the fastest way you can create email reminders.

Free. No signup required. Instant.

# How can I add the reminder really fast?
You just need to use @ for the date and time, as in the examples below:

  • Pay rent today @tomorrow 6pm
  • Get ready for the concert @june 6 14:00
  • Dentist today at 2 pm @next monday 8am
  • Take a 30 minutes break @in 2 hours
  • Renew the car insurance @next month
  • My brother’s wedding in 2 weeks @22nd of next month

See more examples.

# How do I make sure the notification email arrives in my inbox?
In rare cases some email providers may mark the reminder emails as spam. If you don’t see a notification email in your inbox, make sure to also check the spam folder, or better, add no-reply@reme.io to your address book or contact list.
# What timezone does Reme.IO use?
Each time you create or update a reminder your timezone is detected automatically based on the current time on your device. This means that Reme.IO can send you the reminder email in accordance with the timezone the reminder was created in. 

For example, if your timezone is Europe/Amsterdam (UTC+1:00), and you schedule a reminder for June 22, 4pm, you will receive the reminder email at June 22, 4pm (UTC+1:00). As simple as that.

Reme.IO takes in consideration also daylight saving times, so you can forget about timezones. Reme.IO always adapts to you.

# Is my e-mail address safe?
The email address you enter is used for the sole purpose of receiving the reminder e-mail. That’s it. No newsletters or other spam.
# Can I rely on Reme.IO?
Reme.IO is using the industry standard service, Mandrill from MailChimp, on which more than 3 million people rely every month.

Memory Scale – Bytes

Bytes-page-001

மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.
1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட் கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன. தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும்.
2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது. இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.
3. இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.
4. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம்.
5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.
6. டெக்ஸ்ட் ஹைலைட் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டின் ப்ராப்பர்ட்டீஸ் அறிய, அதன் மீது எப்போதும் ஒரு ரைட் கிளிக் செய்தால் போதும். ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, காப்பி செய்து கொண்டால், அந்த சொல்லை எப்போதும், எந்த இடத்திலும் ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்திடலாம்.
இதே போல, மவுஸின் ரைட் கிளிக் மூலம், ஒரு பைல் அல்லது டெக்ஸ்ட் ஒன்றை கிளிக் செய்து இழுத்துச் சென்று, ஓரிடத்தில் விட்டுவிடுகையில், அந்த பைலை அதன் இடத்திலிருந்து நகர்த்த வேண்டுமா அல்லது காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்படும். இது நம் நேரத்தை வீணடிக்காத செயல்பாட்டினைத் தருகிறது. பைலை கிளிக் செய்து, காப்பி செய்து, பின்னர் இன்னொரு இடத்தில் சென்று வைத்திட சற்று நேரம் பிடிக்கும். இது மவுஸின் இந்த தனிச் செயல்பாட்டினால் எளிதாகிறது.
பிரவுசர் ஒன்றில் ஏதேனும் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், கண்ட்ரோல் பட்டனை அழுத்தியவாறு கிளிக் செய்தால், அங்கு அந்த லிங்க் தொடர்பாக ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று தரப்படும்.
7. கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் கிளிக் செய்தால் வரிசையாக அமையாத பைல்கள் அல்லது டெக்ஸ்ட் பகுதிகளை ஹைலைட் செய்திடலாம்.
8. மொஸில்லா பயர்பாக்ஸ் பயனாளர்கள், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, டேபிள் ஒன்றில் உள்ள, தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு செல்லினையும் தனித்தனியே கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
9. தற்போது வருகின்ற மவுஸின் வடிவமைப்பில், பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்படுகின்றன. இந்த பட்டன்களைக் கொண்டு பல செயல்பாடுகளை செட் செய்திடலாம். மாறா நிலையில், இடது பக்கம் உள்ள பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல பயன்படும். இது நமக்கு வசதியாகவும், எளிமையாகவும் இருக்கும். பக்கத்தில் பின்னோக்கிச் செல்ல, மவுஸைத் தனியே நகர்த்தி, வலதுபுறம் உள்ள பாரில் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்து செல்லத் தேவையில்லை.
10. ஸ்நாப் டு பட்டனைப் பயன்படுத்தும் முறை ஒன்று தற்போது உள்ள மவுஸ் இயக்கத்தில் காணப்படுகிறது. டயலாக் பாக்ஸ் ஒன்றின் மூலம் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்கையில், அது உறுதியானதுதானா என நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டு, பின் நாம்,மவுஸின் கர்சரை ஓகே பட்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றை அழிக்க கட்டளை கொடுத்தாலோ, விண்டோ ஒன்றை மூடுவதற்கு முயற்சி எடுத்தாலோ, உடனே ஒரு சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, இந்த செயல்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? என்ற வினா தரப்பட்டு, உங்களிடமிருந்து விடை எதிர்பார்க்கப்படும்.
இப்போது Snap To என்ற வசதி இயக்கப்பட்டிருந்தால், மவுஸின் கர்சர் தானாகவே, Ok பட்டனுக்குச் சென்று தயாராக இருக்கும். செயல்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், நீங்கள் மவுஸால் ஒரு கிளிக் செய்தால் போதும். இதனை எப்படி இயக்கி வைப்பது? என்று எண்ணுகிறீர்களா?
கண்ட்ரோல் பேனல் செல்லுங்கள். அங்கு Mouse properties என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Pointer Options என்ற டேப்பின் கீழ் கிடைக்கும் Snap To என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸ் செட்டிங்ஸ் பிரிவில், மற்ற வசதிகளையும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் செயல் வேகத்தினை அதிகரிக்கலாம். இதன் மூலம், நம் வேலைத் திறனில் வேகம் ஏற்படும்.
எந்த விண்டோவிலும், அதன் மேலாக உள்ள டைட்டில் பாரில் டபுள் கிளிக் செய்தால், விண்டோ அதிக பட்ச அளவில் விரித்துக் காட்டப்படும். ஏற்கனவே விரிக்கப்பட்டிருந்தால், அது சுருக்கிக் காட்டப்படும். எந்த விண்டோவிலும் அதில் இயங்கும் புரோகிராமிற்கான ஐகான் காட்டப்படும். இதில் டபுள் கிளிக் செய்தால், அந்த விண்டோ மூடப்படும். புதிய வடிவமைப்பில் வரும் பல மவுஸ்களில், இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவை எவை எனத் தெரிந்து கொண்டு முழுப் பயனையும் பெறலாம்.

Source: Dinamalar Computermalar

கண்ட்ரோல் + சி

நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் அனைத்தும் கிளிப் போர்டில் தான் சேவ் செய்யப்படுகின்றன. அவ்வப்போது காப்பி செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று காப்பி செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? இதற்கெனவே, கண்ட்ரோல் + சி (ControlC!) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் நமக்கு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நம் பிரவுசரில், நாம் கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றதை எல்லாம் பெற்று பார்க்கலாம்.
இந்த புரோகிராம் http://controlc.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இது நம்மிடம் கேட்கும் முதல் தேவை ஒரு பாஸ்வேர்ட் தான். இதன் மூலம் நம் டேட்டாவினைச் சுருக்கி வைத்துக் கொண்டு பின்னர் கேட்கும் போது தரும்.
எனவே, ஏதேனும் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்து, அதனையே இந்த புரோகிராமிற்கான பாஸ்வேர்டாக அமைத்துவிடவும். பின்னர், இந்த புரோகிராமினைத் திறக்கவும். இது மாறா நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, அதாவது நீங்கள் செட் செய்த பிரவுசரில் திறக்கப்படும். உடன், நீங்கள் செட் செய்த பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதனைக் கொடுத்தவுடன், பிரவுசரில், நீங்கள் கிளிப் போர்டுக்கு அனுப்பிய டேட்டாவினைக் காணலாம். நீங்கள் எதனையும் காப்பி செய்திடவில்லை என்றால், காலியாக இடம் காட்டப்படும். நான், இந்த புரோகிராமினை நிறுவிய பின்னர், சோதனைக்காக சிலவற்றை காப்பி செய்து, பின்னர் எணி பட்டன் அழுத்திய போது அவை காட்டப்பட்டன.
இந்தப் பக்கத்தின் மேலாக உள்ள Advanced என்ற பட்டனைக் கிளிக் செய்தால், மற்ற செட்டிங்ஸ் பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு Advanced Search Settings, Settings, and Blacklist போன்ற டேப்களைப் பார்க்கலாம். Advanced Search Settings பகுதியில், நீங்கள் எந்த வகையில் தேடலை மேற்கொள்கிறீர்கள் என்பதனை வரையறை செய்திடலாம். தொடர்ந்து, சார்ந்த பல அமைப்புகளையும் உருவாக்கலாம். Admin Theme என்ற பிரிவில் கிடைக்கும் கீழ் விரி பட்டியல் பெட்டியில், பத்துவகையான கருத்துப் பொருட்கள், உங்கள் தேடலுக்கென கிடைக்கிறது. அத்துடன் உங்களுக்குக் காட்டப்படுபவை எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும் இங்கு விருப்பமாக அமைக்கலாம்.
டெக்ஸ்ட், பைல் மற்றும் படங்கள், கிளிப் போர்டுக்குச் சென்ற பின்னர், எத்தனை நாட்கள் வைக்கப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். மாறா நிலையில் இது இரு வார காலமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விருப்பங்களையும் இதில் அமைக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://controlc.com/

Source: Dinamalar Computermalar

Paypal – What is Paypal?

Paypal – இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம்.
ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப்
பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும்
அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நிறைய
தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Cheque அல்லது Paypal மூலம்
தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal
Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.

இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.

1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.

2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள்
நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி
கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு
செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில்
என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]

3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில்
உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில்
Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும்
இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create
Account -ஐ கிளிக் செய்யுங்கள்.

4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.

6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக
வேண்டும்.  அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும்.
NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.

7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.


8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.

9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள்
கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக
இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும். அதை செக் செய்து அதை உங்கள்
Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank
Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.

இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும்.
இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள்
வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.

Personal Acount களுக்கு Fees எதுவும் கமிஷன் ஆக பெறப்படுவது இல்லை.



பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்.

1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்.

2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Withdraw funds to your bank account” என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்.

இதில்,

From this balance – உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.

Amount – நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.

To – எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள்
கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள்
நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.

Purpose code – என்ன காரணத்திற்கு பணம் Transfer
செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து
விடலாம். அல்லது உங்கள் விருப்பம்)

இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது.

Source: thaluvalkal

கூகுளில் வேலை வேண்டுமா?

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், “வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை” என்கிறார் அவர். மேலும், “கல்லூரிப் படிப்பு பெற்றிராதவர்களின் எண்ணிக்கை கூகுளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது” என்கிறார். இந்த எண்ணிக்கை சில குழுக்களில் 14% வரை இருக்கிறது.

வழி என்ன?

சமீப காலமாகப் பெரும்பாலானவர்களின் கேள்வி இதுதான்: “என் பிள்ளைக்கு வேலை கிடைப்பதற்கு வழி என்ன?” பாக் என்ன சொல்கிறார் என்பதை இவர்கள் எல்லா ரும் கேட்பது மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

பாக் மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். “நல்ல மதிப்பெண்களால் நிச்சயம் பிரச்சினை இல்லைதான்” என்கிறார் பாக். கூகுளில் நிறைய வேலைகளுக்குக் கணிதம், கணக்குப் போடுதல், கணினி மொழியை எழுதுதல் ஆகிய திறன்கள் அடிப்படை. எனவே, மேற்கண்ட துறைகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்தத் திறனையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கூகுள் தேடுவது இதற்கெல்லாம் மேலே. “வேலைக்கு ஆள் எடுப்பதில் நாங்கள் ஐந்து விஷயங்களைப் பின்பற்றுகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்றால், கட்டளை நிரல்களை எழுதும் திறனை மதிப்பிடுவோம். நாங்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் பொதுவான புரிந்துகொள்ளும் திறன்தான். தவிர, அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அல்ல. ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போதும் செயல்படக்கூடிய திறன்தான் முக்கியம். சிதறிக்கிடக்கும் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டும் திறன்தான் முக்கியம். ஒருவருடைய இயல்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முறையான தேர்வுகளைக்கொண்டு மேற்கண்ட குணங்களையெல்லாம் நாங்கள் கண்டறிகிறோம்” என்கிறார் பாக்.

தலைமைப் பண்பு

அடுத்த விஷயம், தலைமைப் பண்புதான் என்கிறார் அவர். “வழக்கமான தலைமைப் பண்பைவிட, வளர்ந்து வரும் தலைமைப் பண்புக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நீங்கள் செஸ் சங்கத்துக்குத் தலைவராக இருந்திருக்கிறீர்களா? விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா? எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள்? இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா? அதே போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா? இதெல்லாம்தான் முக்கியம். இந்தப் பணிச்சூழலில் திறன்வாய்ந்த தலைவராக இருப்பதற்கு அதிகாரத்தைத் துறக்கத் துணியக் கூடிய குணம் மிக முக்கியம்” என்கிறார் பாக்.

அப்புறம் என்னென்ன? தன்னடக்கமும் தன்னுடைய தாகக் கருதும் இயல்பும். “ஒரு விஷயத்தில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நினைத்து முன்வரும் குணம், அது மிகவும் முக்கியம்” என்கிறார் பாக். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயலும் பண்பும் அப்படித் தீர்வுகாண முடியாத பட்சத்தில், தனது நிலையிலிருந்து இறங்கிவந்து பிறருடைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் அது. “தீர்வை எட்டுவதற்கு நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து என்ன செய்ய முடியும் என்பதுதான் உங்களுடைய இறுதி இலக்கு. என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், பிறர் பங்களிப்பு செய்வதற்காக நான் இப்போது ஒதுங்கிக்கொள்கிறேன் என்னும் இயல்பு” என்று விளக்குகிறார் பாக்.

சின்ன ஈகோவும் பெரிய ஈகோவும்

மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்கள், அதாவது நாங்கள் வேலைக்கு எடுக்க விரும்புபவர்கள், தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அனல்பறக்க விவாதிப்பார்கள். ஆனால், மறுக்க முடியாத ஒரு புதிய கோணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டும்போது, “ஆமாம், நீங்கள் சொல்வதுதான் சரி” என்று ஒப்புக்கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒரே நபருக்குள் பெரிய ஈகோவும் சின்ன ஈகோவும் இருக்க வேண்டும்” என்கிறார் பாக்.

“நிபுணத்துவம் என்ற விஷயத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை” என்கிறார் பாக். “நல்ல சிந்தனைத் திறன் கொண்டவர் இயல்பாகவே ஆர்வம் கொண்டவராகவும் கற்றுக்கொள்ள விரும்புபவராகவும் தலைமைத் திறனின் அறிகுறிகளைக் கொண்டவராகவும் இருப்பார். அவரை நிபுணருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ‘நான் இதை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன்’ என்று அந்த நிபுணர் சொல்வார். நிபுணர் அல்லாதவரும் பலமுறை இதுபோல்தான் சொல்வார் என்றாலும், அவ்வப்போது மிகமிகப் புதியதும் பிரமாதமானதுமான ஒரு விஷயத்தை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது” என்கிறார் பாக்.

வேலைக்கு ஆள் எடுப்பதற்கு பாக் பின்பற்றும் அணுகுமுறையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: திறமைகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம், வழக்கத்துக்கு மாறான வகைகளிலும் அவை காணக் கிடைக் கலாம். எனவே, ஆள் எடுக்கும் அதிகாரிகள் பிரபலமான கல்லூரிகளின் பெயர்களைப் பார்த்து அசந்துவிடாமல், ஒவ்வொருவரையும் விழிப்புடனே அணுக வேண்டும். ஏனென்றால், “முறையான கல்வியை அதிகம் பெறாமல், தாங்களாகவே தடுக்கி விழுந்து கற்றுக்கொண்டவர்கள் பிரமாதமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எப்பாடுபட்டாவது நாம் கண்டுபிடித்தாக வேண்டும். புற்றீசல்போல் பெருகியிருக்கும் கல்லூரிகள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மலைமலையாகக் கடன்தான் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் எதையும் நீங்கள் கற்றுக்கொள்வதில்லை.”

கூகுளுக்குப் பெருமளவில் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் மரபான தர அளவீட்டு முறைகளைத் தாண்டி, அந்தத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்குப் போய் நன்றாகப் படிப்பதுதான் தங்கள் வருங்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாக் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். “எச்சரிக்கை. உங்கள் படிப்பு என்பது எந்த வேலையையும் நீங்கள் செய்யக்கூடியவர் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்கு முக்கியம். அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்போகிறார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் என்பது ஒரு குழு முயற்சியாக ஆகிவரும் இந்தக் காலத்தில், வேறு விதமான சில திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது: தலைமைப் பண்பு, தன்னடக்கம், ஒத்துழைப்பு, தகவமைத்துக்கொள்ளும் திறன், கற்றல், மறுபடியும் கற்றல் ஆகிய திறன்கள்தான் அவை. நீங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

Source: thehindu

ஆப்பிள்: 11 ரகசியங்கள்

எங்கும் நிறை ஐ-போன், ஐ-பேட் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கிறது. இந்த நிறுவனம் குறித்து மிகக் குறைவாகவே வெளியுலகுக்குத் தெரியும். மேலும் தெரிந்துகொள்ளச் சில தகவல்கள்:

1. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு தத்துப்பிள்ளை, அப்பா சிரிய நாட்டவர்:

ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் என்ற மூவர் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், 2011 அக்டோபரில் காலமானார். ஜோன் ஷிபல், அப்துல்ஃபட்டா ஜண்டாலி என்ற இருவரும் தங்களுடைய 23-வது வயதில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது சந்தித்துக்கொண்டனர். அவர்களுடைய மகன்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். ஷீபலின் பெற்றோர் கொடுத்த நெருக்குதல் காரணமாக 1955-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் தத்துக்கொடுக்கப்பட்டார். ஷீபலும் ஜண்டாலியும் பிறகு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

2. ஆப்பிளின் முதல் கம்ப்யூட்டருக்கு ‘சாத்தான்’ விலை:

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணிப்பொறி ‘ஆப்பிள்-1’ விலை 666.66 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது. 6 என்ற எண் அடுத்தடுத்து 3 முறை வருவது சாத்தானைக் குறிப்பது என்பது விலையை நிர்ணயித்த ஸ்டீவ் வோஸ்னிக்குக்குத் தெரியாது. அந்தக் கணிப்பொறியின் மொத்த விற்பனை விலை 500 டாலர். அத்துடன் மூன்றில் ஒரு பங்கு விலையைச் சேர்த்து சில்லறை விற்பனை விலையை நிர்ணயித்தார். 667 டாலர் என்பதே அந்த விலை. ஆனால், பில்லில் ‘டைப்’ செய்ய வசதியாக இருக்கட்டும் என்று 666.66 என்று நிர்ணயித்தார்!

3. விமானத்தில் பறக்கும் ஆப்பிள்:

கத்தாய் பசிபிக் விமான நிறுவனத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளர் ஆப்பிள் நிறுவனம்தான். கப்பல் வழியாக அனுப்ப விரும்பாமல் தன்னுடைய தயாரிப்புகளை விமானம் மூலமே அனுப்பியது. இதனால் சரக்குகள் உரிய இடத்தை வெகு விரைவாக அடைந்தன. சரக்குக் கட்டணம் அதிகமாக இருந்தாலும், சரக்குகள் விற்பனைக்கு வராமல் முடங்கும் காலம் கணிசமாகக் குறைந்தது. இதனால், கையிருப்பு ஸ்டாக்குகளில் பணம் முடங்குவது கணிசமாகக் குறைந்தது. கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குப் பெட்டகங்களில் கைபேசிகள், டேப்லெட்டுகள், கணிப்பொறிகள் வருவதை அறிந்து அதை கொள்ளைக்காரர்கள் கடத்தும் ஆபத்தும், விபத்து நேரிட்டால் கடலில் மூழ்கி, சந்தைக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் உண்டு. அது விமானத்தில் அனுப்பியதால் தவிர்க்கப்பட்டது.

4. மசின்டோஷ்:

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ‘மசின்டோஷ்’, ஜெஃப் ரஸ்கினுக்கு மிகவும் பிடித்த ரகம். அப்போதைக்கு அது குறியீட்டுப் பெயர்தான். ரஸ்கின் அலுவலகத்தில் இல்லாத நேரம் அங்கு வந்த ஜாப்ஸ் அதற்கு ‘பை-சைக்கிள்’ என்று பெயர் சூட்ட முற்பட்டார். என்ன காரணத்தாலோ அது தடைப்பட்டது. ‘மசின்டோஷ்’ என்ற பெயர் நிலைத்ததுடன் நன்கு பிரபலமும் ஆகிவிட்டது.

5. ஆப்பிளின் வித்தியாசமான ஹீரோ ஷாட்டுகள்:

ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பரங்களில் இடம்பெற்ற படங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டவை அல்ல. மிக நன்றாகப் படம்பிடிக்கப்பட்ட சூப்பர் – குளோசப் புகைப்படங்களைச் சேர்த்து உருவாக்கியவை.

6. ஸ்டீவ் வோஸ்னியாக் இன்னமும் ஊழியர்தான்:

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக், வோஸ் என்றும் அழைக்கப்படுவார்.

1976-ல் தன்னுடைய கார் கேரேஜில் ஸ்டீவ் ஜாப்ஸுடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது தொடர்ந்து வேலைக்கு வருவதில்லை என்றாலும், ஊழியர் பட்டியலில் பெயர் இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு 1,20,000 டாலர்கள் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

7. ஓ வவ். ஓ வவ். ஓ வவ்:

ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்னால் தனது படுக்கைக்கு அருகில் திரண்டு நின்ற குடும்பத்தினரைப் பார்த்து “ஓ வவ். ஓ வவ். ஓ வவ்” என்று 3 முறை கூறியதாக அவருடைய சகோதரி மோனா சிம்ப்சன் தெரிவிக்கிறார். மோனா எழுதிய இரங்கல் கவிதைதான் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு பிரார்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது.

8. 3,500 கோடி டாலர்கள் போச்சே:

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் ஆகிய மூன்று பேர் தொடங்கினர். இவர்களில் ரொனால்டுதான் ஆப்பிள் நிறுவனத்தின் இலச்சினையை வரைந்து, கூட்டு ஒப்பந்தப் பத்திரத்தைத் தயாரித்து, ‘ஆப்பிள்-1’ கணினி நிறுவனத்துக்கான தயாரிப்பு வரைமுறையை எழுதியவர். பிறகு, கடன் தொல்லையால், அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த 10% பங்குகளை வெறும் 800 டாலர்களுக்கு விற்றுவிட்டார். அந்தப் பங்குகளை மட்டும் அவர் இப்போது தன்னிடமே வைத்திருந்தால், அதன் மதிப்பு 3,500 கோடி டாலர்களாகும்!

9. ஐவ்-வுக்கு நன்றி:

வெள்ளை நிறத்தில் எதையுமே தயாரிக்கக் கூடாது என்று முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பாளரான சர் ஜானி ஐவ் அதை வெள்ளை நிறத்தில் தயாரித்தபோது ஏற்றுக்கொண்டார். ‘மூன் கிரே’ வண்ணத்தில் தயாரித்துக் காட்டினாராம் ஐவ். அது வேண்டாம் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் நிராகரித்ததால் வெள்ளை நிறத்தில் தயாரித்துக் காட்டினாராம். இதை மற்றொரு வடிவமைப்பாளரான டக் ஸாட்ஸ்கர் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

10. கட்டு எப்படி?

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய பொருள்களைத் தயாரிக்க எடுத்துக்கொள்ளும் அக்கறைக்குச் சற்றும் குறைவில்லாமல் அதை அடைக்கும் பேக்கிங்குகளுக்கும் தருகிறது. கலிஃபோர்னியாவின் கபுர்டினோ என்ற இடத்தில், பேக்கிங் வடிவமைப்பதற்காக ரகசிய இடத்தையே வைத்திருந்தார்களாம். பேக்கிங் டிசைனர்கள் என்ற வடிவமைப்பாளர்கள் மணிக் கணக்கில் வேலை செய்து விதம்விதமாகப் பெட்டிகளைத் தயாரித்துவந்து காட்டுவார்களாம். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை விலைகொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் வீட்டுக்குப் போய் அதைப் பிரிக்கும்போது அவர்களுடைய முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, திருப்தி, பூரிப்பு, பெருமிதம் ஆகியவை வெளிப்படும் விதத்தில் பேக்கிங் இருக்க வேண்டும் என்பதற்காகவே அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆப்பிள் சாதனங்கள் கண்ணுக்குத் தெரியாதபடிக்குப் பெட்டியில் அடைத்து வைக்கப்படும். அந்த அட்டைப் பெட்டியை எப்படி, எங்கே, சேதமில்லாமல் எளிதாகப் பிரிக்க வேண்டும் என்று அம்புக்குறிகளும் வாசகங்களும் பொறித்திருப்பார்கள். அந்தக் குறிகளைத் தயாரிக்கவும் அதற்கு வண்ணம் தேர்வு செய்யவும்கூட பெரும் அக்கறை எடுத்துக்கொண்டார்கள்.

11. பந்துகள்:

ஜானி ஐவ் வாழ்க்கைகுறித்துப் புத்தகம் எழுதிவரும் லியாண்டர் கானி தனது புத்தகத்தில், ‘ஐமேக் ஜி4’ என்பது ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தைச் சேர்த்துள்ளார். அந்த சாதனத்தில் பந்து வடிவ ஸ்பீக்கர்கள் அதன் இரு புறங்களிலும் இருப்பதைப்போல வடிவமைத்துள்ளனர். அசப்பில் இது ஆணின் மர்மஸ்தானத்தைப் போலவே காட்சிதருகிறது. இது என்ன என்று கேட்டால், வடிவமைப்பாளர்கள் வேண்டுமென்றே இப்படி இதைச் செய்ததாகப் பதில் கிடைத்திருக்கிறது.

ஜானி ஐவ் உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர். அவருடைய பள்ளிக்கூடப் புகைப்படமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தில் அவருடைய கிராப்புத் தலை மிக வித்தியாசமாக வசீகரமாக இருக்கிறது.

Source: thehindu